search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை கொள்ளை"

    மதுரை நாகமலை புதுக்கோட்டையில் வீடு புகுந்து 9 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ் இளையராஜா (வயது 46). இவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. எனவே அவரை பார்த்துக் கொள்வதற்காக சந்தோஷ் இளையராஜா பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி, மகன் மட்டும் வீட்டில் இருந்தனர்.

    சம்பவத்தன்று அவர்கள் வீட்டின் படுக்கை அறையில் தூங்கினர். அப்போது நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் பின்கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.

    பின்னர் நைசாக பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி, 4 பவுன் வளையல், ஒரு பவுன் தோடு, ஒரு பவுன் மோதிரம் உள்பட 9 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.

    மறுநாள் நகைகள் திருடு போயிருப்பது கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சந்தோஷ் இளையராஜா நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    இதனடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மதுரை மாவட்டம் திருமங்கலம் புரோட்டா மாஸ்டர் வீட்டில் 26 பவுன் நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் புதுப்பட்டி அருகே ரெங்கபாளையம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் செக்கானூரணியில் உள்ள கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். மாதத்துக்கு ஒருமுறை தான் ஊருக்கு செல்வது வழக்கம்.

    சரவணகுமாரின் தாயார் அருகில் வசித்து வருகிறார். இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் சரவணக்குமாரின் மனைவி லதா மற்றும் மகள் ஆகியோர் இரவு நேரம் மாமியார் வீட்டுக்கு சென்று அவரை கவனித்து அங்கேயே தூங்குவது வழக்கம். அதேபோல் நேற்று இரவும் தாயும், மகளும் அங்கு சென்று விட்டனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம ஆசாமிகள் யாரோ வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 26 பவுன் நகை மற்றும் பொருட்களை திருடி சென்றனர்.

    இன்று காலை வீடு திரும்பிய லதா, கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    மதுரையில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் வக்கீலிடம் 3¼ பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை அய்யர் பங்களா அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகள் பூங்கொடியாள் (வயது 35) வக்கீல்.

    இவர் இருசக்கர வாகனத்தில் உத்தங்குடி சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின் தொடர்ந்தனர்.

    அவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென பூங்கொடியாள் அணிந்திருந்த 3¼ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அண்ணாநகர் சதாசிவம் நகர் நக்கீரர் குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் பெங்களூருவில் என்ஜினீயராக உள்ளார். அவரது மனைவி ஜனனி (23).

    சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அவர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் ஜனனி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை திருடிய மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.
    மதுரையில் கோவில் அர்ச்சகர் வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை கே.கே.நகர் லோகாஸ் காலனியைச் சேர்ந்தவர் முரளிக்கண்ணன் (வயது 39). இவர் அங்குள்ள கற்பக விநாயகர் கோவிலில் அர்ச்சகராக உள்ளார்.

    கடந்த 9-ந் தேதி முரளிக்கண்ணன் குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டார். இதனால் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. நேற்று காலை அவர்கள் வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்துள்ளது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவும் திறந்து கிடந்தது. இதனைக் கண்டு முரளிக்கண்ணன் அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்திருப்பது தெரிய வரவே, அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    வீட்டின் பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் முரளிக்கண்ணன் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருங்குடியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் நகையை பறித்து தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், பெருங்குடி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபோஸ். இவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது மர்ம நபர் ஒருவன், நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து சந்திர போசின் மனைவி அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.

    விழித்து பார்த்த சந்திரபோஸ் மற்றும் குடும்பத்தினர் விரட்டிச் சென்றபோது மர்ம நபர் தப்பிச் சென்று விட்டான். திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இது குறித்து பெருங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகிறார்.
    நாகமலை புதுக்கோட்டையில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்து வழிப் பறி ஆசாமிகள் தப்பி விட்டனர்.
    மதுரை:

    மதுரை செக்கானூரணியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 40). இவரது மனைவி சுதா. 2 பேரும் மோட்டார் சைக்கிளில் நாகமலை புதுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுதா அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி விட்டார். இதன் மதிப்பு ரூ.1.40 லட்சம் ஆகும்.

    இது குறித்து ஜெயபிரகாஷ் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மதுரையில் டாக்டர் உறவினர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை நத்தம் சாலை பொறியாளர் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் கமீல். இவரது மாமியார் வீடு, அண்ணாநகர் ராயல் கார்டன் பகுதியில் உள்ளது.

    சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு டாக்டர் கமீல் வீட்டுக்கு மாமியார் வந்தார். இதனை பயன்படுத்தி யாரோ பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

    இந்த நிலையில் கமீலின் மாமியார் வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த ஒரு பவுன் மோதிரம், ஒரு கேமிரா, 2 செல்போன்கள் திருட்டு போயிருப்பதாக அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மேலமடை வித்தகர் சந்து பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி ஜெய லட்சுமி (69). இவர் ஒத்தவீடு பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஜெயலட்சுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதிச்சியம் நடுத்தெருவைச் சேர்ந்த திலீப்குமார் (56) கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த முனியாண்டி (42) சிவகங்கை மாவட்டம், முத்தனேந்தலைச் சேர்ந்த ரவுடி காட்டான் ஆறுமுகம் (32) ஆகியோர் கத்திமுனையில் சிகரெட் பண்டல்களை பறித்துச் சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து முனியாண்டி மற்றும் காட்டான் ஆறுமுகம் கைது செய்யப்பட்டனர்.
    அவனியாபுரம் அருகே போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 8 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள குருதேவ் நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 67). இவர் சம்பவத்தன்று பைபாஸ் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 டிப்- டாப் ஆசாமிகள் கிருஷ்ணவேணியை மறித்து தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்தினர்.

    பின்னர் அவர்கள் இந்த பகுதியில் நகை பறிப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. எனவே நகையை அணிந்து செல்ல வேண்டாம் என கூறியுள்ளனர்.

    மேலும் கிருஷ்ணவேணியிடம் நகையை தாருங்கள் பேப்பரில் வைத்து தருகிறோம் என கூறியுள்ளனர்.

    இதை நம்பிய கிருஷ்ணவேணி தான் அணிந்து இருந்த 8 பவுன் நகையை அவர்களிடம் கொடுத்தார். மர்ம நபர்கள் நகையை பேப்பரில் வைக்காமல் திருடிக்கொண்டு அதற்கு பதிலாக கற்களை வைத்து கொடுத்துவிட்டு சென்றனர்.

    இதையறியாத கிருஷ்ணவேணி வீட்டுக்கு வந்து மர்ம நபர்கள் கொடுத்த பொட்டலத்தை திறந்து பார்த்தபோது அதில் கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை ஐராவதநல்லூரை சேர்ந்தவர் மரிய பிரான்சிஸ். இவரது மனைவி சகாயரீட்டா மேரி (30). நேற்று கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர். தெப்பக்குளம் ராம்நாட் ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது மற்றொரு மோட் டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் சகாயரீட்டா மேரி கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமங்கலத்தில் அரசு பஸ்சில் பெண் டாக்டரிடம் நகை- பணத்தை கொள்ளையடித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    பேரையூர்:

    மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி ராமலட்சுமி (வயது 68). டாக்டரான இவர், அலங்காநல்லூரில் கிளீனிக் நடத்தி வருகிறார். வேலை நிமித்தமாக ராமலட்சுமி நேற்று திருநெல்வேலிக்கு சென்று விட்டு அரசு பஸ்சில் ஊருக்கு புறப்பட்டார்.

    திருமங்கலம் வந்தபோது ராமலட்சுமி வைத்திருந்த கைப்பை மாயமாகி இருந்தது. அதில் 11 பவுன் நகையும், ரூ.16 ஆயிரம் ரொக்கமும் இருந்தது. அதிர்ச்சியடைந்த ராமலட்சுமி பஸ் முழுவதும் தேடிப்பார்த்தும் கைப்பை கிடைக்கவில்லை.

    இது குறித்து ராமலட்சுமி திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்தார். அதில், பஸ்சில் பயணம் செய்தபோது எனது அருகில் அமர்ந்திருந்த பெண் நகை, பணத்தை திருடியிருக்கலாம் என சந்தேகம் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் நகை திருடிய பெண்ணை தேடி வருகின்றனர்.

    மதுரை அருகே கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்றிருந்தபோது வியாபாரி வீட்டில் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வரு கின்றனர்.
    புதூர்:

    மதுரை உத்தங்குடி அருகில் உள்ள அமச்சியாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 43). இரும்பு கடை வைத்துள்ள இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு அருகில் உள்ள தேவாலயத்துக்கு குடும்பத்தினருடன் சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 28 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.

    பிரார்த்தனை முடிந்து வீடுதிரும்பிய ஆனந்தன் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை கொள்ளை போய் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    மதுரையில் ஜவுளி கடைக்குள் புகுந்த கும்பல் ரூ.1 லட்சம் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகளை கொள்ளையடித்துச் சென்றது.
    மதுரை:

    மதுரை தபால்தந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் (வயது 42). இவர் மகால் சாலையில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை அடைத்துச் சென்று விட்டார். நேற்று காலை கடைக்கு வந்த அவர் பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தெற்குவாசல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியபோது ஜவுளிக்கடையின் 3-வது மாடி ஜன்னலை உடைத்து யாரோ உள்ளே வந்திருப்பது தெரியவந்தது.

    கடையில் இருந்த ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் மற்றும் கம்ப்யூட்டர், சி.சி.டி.வி. ஆகியவற்றின் ஹார்டு டிஸ்க்குகள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் ராஜேந்திரகுமார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எஸ்.எஸ்.காலனி கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த சந்திரன் மனைவி மணிமாலா (44) போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

    விராட்டிப்பத்து பகுதியில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்சில் திருமங்கலம் ஊத்துப்பட்டியைச் சேர்ந்த சசிகுமார், அவரது மனைவி ஜெயஸ்ரீ, கூடல்நகர் ரமேஷ்குமார், சவுந்தர பாண்டி ஆகியோர் கூட்டாக ஓட்டல் நடத்தி வருகின்றனர்.

    ரூ.5 லட்சம் அட்வான்ஸ், மாத வாடகை ரூ.30 ஆயிரம் என்று பேசி வாடகைக்கு விட்டேன். ஆனால் பணத்தை சரிவர கொடுக்காமல் போலி ஆவணம் தயாரித்து குத்தகையை கால நீட்டிப்பு செய்து 4 பேரும் மோசடி செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரையில் அரசு பஸ்சில் இளம்பெண்ணிடம் 10 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    அண்மைக்காலமாக வெளியூர்களில் இருந்து மதுரைக்கு வரும் பஸ் பயணிகளிடம் பணம், நகைகளை கொள்ளையடிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. வாரத்தில் பலர் தங்களது உடைமைகளை இழந்து போலீசில் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

    கடந்த 15-ந்தேதி தூத்துக்குடியை சேர்ந்த உமாமகேஸ்வரி என்ற பெண் பஸ்சில் மதுரைக்கு வந்தபோதுஅருகில் அமர்ந்திருந்த மர்ம பெண் 8 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது

    இந்த நிலையில் தற்போதும் வெளியூர் பெண் பயணியிடம் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    கரூர் வையாபுரி நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி லட்சுமி (வயது39). இவர் சம்பவத்தன்று தனது மாமியாருடன் பரமக்குடியில் இருந்து கரூர் செல்வதற்காக மதுரைக்கு வந்தார்.

    எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இறங்கிய அவர்கள் ஆரப்பாளையம் செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் ஏறினார். அப்போது லட்சுமி தூக்கக்கலக்கத்தில் இருந்தார். அருகில் அமர்ந்திருந்த பெண் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லட்சுமியின் கைப்பையை திருடிக்கொண்டு தப்பினார். அதில் 10 பவுன் நகை இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×